பஸ் ஜன்னல் வழியாக குதித்து பெண் தற்கொலை
இந்நிலையில் அருணாவும் அவரது அம்மாவும் நேற்று முன்தினம் இரவு திருநாகேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு மூத்த மகளான ரமா(35) வீட்டிற்கு சென்றுள்ளனர். நேற்று மீண்டும் சொந்த ஊருக்கு செல்வதற்காக கிளாம்பாக்கத்தில் இருந்து தனியார் சொகுசு பேருந்தில் வந்தனர். அப்போது திண்டிவனம் அருகே கூச்சிகொளத்தூர் பகுதியில் பேருந்து சென்றபோது ஓட்டுநரின் பின்புற இருக்கைக்கு அருகே இருந்த ஜன்னல் வழியே அருணா கீழே குதித்துள்ளார்.
இதில் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.