சாட்சியை மிரட்டினால் காவல்துறை நேரடியாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யலாம்: உச்சநீதிமன்றம் அதிரடி
டெல்லி: சாட்சியை மிரட்டினால் காவல்துறை நேரடியாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாட்சிகள் மிரட்டப்பட்டால் நேரடியாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. சாட்சியை மிரட்டுவது தண்டனைக்குரிய குற்றம், வழக்குப் பதிய நீதிமன்றத்தின் புகார் தேவையில்லை எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்து நீதிபதிகள் சஞ்சய்குமார், ஆலோக் அராதே உத்தரவிட்டனர்.
Advertisement
Advertisement