வழக்கில் சாட்சியாக உள்ள குழந்தைகளை உளவியல் ரீதியாக பாதுகாப்பது தொடர்பாக குழு அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு
கோவை : வழக்கில் சாட்சியாக உள்ள குழந்தைகளை உளவியல் ரீதியாக பாதுகாப்பது தொடர்பாக குழு அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க பல துறைகள் அடங்கிய குழுவை அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு எடுத்துள்ளது. கோவையில் சகோதரியை 8 வயது மகளின் கண் எதிரே வெட்டிக் கொன்ற வழக்கில் சரவண குமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. வழக்கில் 8 வயது குழந்தையின் சாட்சியத்தின் அடிப்படையிலேயே சரவண குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனையை எதிர்த்து, சகோதரர் சரவண குமாரின் மேல் முறையீட்டு வழக்கு ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அப்போது, தாய் கொலை செய்யப்பட்டதை நேரில் பார்த்த குழந்தையின் மனநிலையை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
Advertisement
Advertisement