தூத்துக்குடியில் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலையை நிறுவிய வின்பாஸ்ட்
வியட்நாமைச் சேர்ந்த முன்னணி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான வின்பாஸ்ட், தூத்துக்குடியில் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலையை நிறுவியுள்ளது. இந்த ஆலையில் வின்பாஸ்ட் விஎப்7 மற்றும் விஎப்6 கார்கள் அறிமுகம் செய்யயப்பட உள்ளன. இதற்கான முன்பதிவும் நடந்து வருகிறது. இந்த இரண்டு கார்களையும், பாரத் மொபிலிடி எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்த கார்களை அடுத்த மாதம் 6ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக வின்பாஸ்ட் நிறுவன தரப்பில் கூறப்பட்டள்ளது.
Advertisement
விஎப்7 காரில் 70.8 கிலோவாட் அவர் பேட்டரி உள்ளது. 204 எச்பி பவர் மற்றும் 350 எச்பி திறன்களை வெளிப்படுத்தும் இரண்டு வித இன்ஜின் தேர்வுகளில் கிடைக்கும். விஎப்6-ல் 59.6 கிலோவாட் அவர் பேட்டரி, 204 எச்பி பவரை வெளிப்படுத்தும் இன்ஜின் இடம் பெற்றிருக்கும் என நிறுவனத் தரப்பில் கூறப்படுகிறது.
Advertisement