விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலைய கார் பார்க்கிங்கில் மழைநீர் தேங்குவதால், வாகனங்களை எடுக்க பயணிகளுக்கு அறிவுறுத்தல்..!!
சென்னை: விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலைய கார் பார்க்கிங்கில் மழைநீர் தேங்குவதால், வாகனங்களை எடுக்க பயணிகளுக்கு மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலைய நான்கு சக்கர வாகன நிறுத்தியதால் மழை நீர் அதிக அளவில் தேங்குவதால், அங்கு நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை உடனடியாக எடுக்க வேண்டும் என மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனமழை பெய்து வருவதால் அங்கு தேங்கி இருக்கும் மழை நீர் வடிந்தவுடன் மீண்டும் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் வெளியேற்றப்படும் வரை 4 சக்கர வாகன பார்க்கிங் மூடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அருகே மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. இருப்பினும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக சென்னையின் சில பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனை அவ்வப்போது மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். இந்த நிலையில் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலைய கார் பார்க்கிங்கில் மழைநீர் அதிக அளவில் தேங்கியுள்ளது.