விம்பிள்டன் டென்னிஸ்; காலிறுதியில் சின்னர், மெட்வடேவ் பலப்பரீட்சை: மகளிரில் பவோலினி-எம்மா நவோராவ் மோதல்
கடந்த 2024ம் ஆண்டில் தான் ஆடிய மொத்த ஆட்டங்களில் 42 வெற்றி 3 தோல்வி கண்டுள்ள சின்னர், புல்தரையில் தான் ஆடிய 9 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளார். இதேபோல் நடப்பு ஆண்டில் மெட்வடேவ் ஆடிய மொத்த ஆட்டங்களில் 32 வெற்றியும், 9 ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளார். இதுவரை இருவரும் புல்தரையில் நேருக்கு நேர் மோதியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் விம்பிள்டன் கோப்பைக்கு வரிந்து கட்டுவதால் இன்றைய ஆட்டம் டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் மாலை 6.45 மணிக்கு தொடங்கும் மற்றொரு காலிறுதி போட்டியில் 4வது நிலை வீரரான ஸ்பெயின் நாட்டை சேர்ந்த அல்கராஸ் கர்பியா 13ம் நிலை வீரரான அமெரிக்காவை சேர்ந்த டாமி பாலுடன் பலப்பரீட்சை நடத்துகிறார். இதேபோல் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மகளிர் போட்டியில் இரண்டு அரையிறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. அதில் மாலை 5.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் தரவரிசையில் 123 இடத்தில் உள்ள நியூசிலாந்தை சேர்ந்த லூலு சுன் 37வது இடத்தில் உள்ள குரோட்டியாவை சேர்ந்த டி வெகிக்குடன் மோதுகிறார். இரவு 8 மணிக்கு தொடங்கும் மற்றொரு காலிறுதி போட்டியில் 7வது நிலை வீராங்கனையான இத்தாலியை சேர்ந்த ஜாஸ்மின் பவோலினி 17வது நிலை வீராங்கனையான எம்மா நவோராவை எதிர்கொள்கிறார்.