திருத்திக் கொள்வாரா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவிற்கு 50 சதவீதம் ஏற்றுமதி வரியை விதித்தார். இது இந்தியா மட்டுமன்றி உலக நாடுகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் மறுஉத்தரவு வரும்வரை, இந்தியாவுடன் வர்த்தகம் கிடையாது என்றும் அறிவித்தார். இதை இந்தியா, பெரும்பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. இதற்கு மத்தியில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள், டிரம்பின் நடவடிக்ைகக்கு எதிரான அஸ்திரத்தை தற்ேபாது சுழற்றியுள்ளனர். இது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குறிப்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் வட கரோலினாவின் காங்கிரஸ் பிரதிநிதிகளின் பேச்சு இதற்கான அடித்தளத்தை அமைத்துள்ளது. ‘வர்த்தகம், முதலீடு, நல்லுறவு ஆகியவற்றால் இந்தியாவுடன் வட கரோலினாவின் ெபாருளாதாரம் ஆழமாக பதிந்துள்ளது. இங்கு இந்திய நிறுவனங்கள், ஒரு பில்லியன் டாலருக்கு மேல் முதலீடு செய்துள்ளன. மேலும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன.
இந்தியாவுக்கு நூற்றுக்கும் அதிகமான மில்லியன் டாலர் பொருட்களை வட கரோலினா ஏற்றுமதி செய்கிறது. இந்த வரிகள் என்பது அமெரிக்காவின் நலன்கள், பாதுகாப்பை மேம்படுத்தவில்லை. மாறாக விநியோக சங்கிலிகளை சீர்குலைத்துள்ளது. இது அமெரிக்க தொழிலாளர்களுக்கு தீங்கு விளைவிப்பதோடு, நுகர்வோருக்கான செலவுகளையும் அதிகரிக்கிறது’ என்பது அவர்கள் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளனர்.
இது மட்டுமன்றி டிரம்ப் சார்ந்துள்ள குடியரசு கட்சி பிரதிநிதிகளும் இந்தியா மீதான வரிவிதிப்புக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இந்தியா மீதான தனிப்பட்ட வெறுப்புகளுக்காக வரி, விசா கட்டணங்களை டிரம்ப் அதிகரித்துள்ளார். இதன்மூலம் இருநாடுகளுக்கான உறவை சீர்குலைத்துள்ளார். இது அமெரிக்கா, பல ஆண்டுகளாக இந்தியாவுடன் கட்டி எழுப்பி வந்த உறவை வீணடித்துள்ளது. அமெரிக்காவில் தொழில்நுட்பம் மற்றும் அறிவியலுக்கு இந்தியர்கள் செலுத்தி வரும் பங்களிப்பை அவமதிக்கும் வகையில் டிரம்பின் அணுகுமுறை உள்ளது.
பாதுகாப்பு துறை, எரிசக்தி துறை, செயற்ைக நுண்ணறிவு, விண்வெளி மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் போன்றவை வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தநிலையில் அமெரிக்காவின் தற்போதைய சூழலுக்கு இந்தியாவுடன் நல்லஉறவு என்பது மிகவும் அவசியமாகிறது. அப்படி இருக்கையில் டிரம்ப் இவ்வாறு செய்திருப்பது இந்தியா மட்டுமன்றி சர்வதேச நாடுகளின் உறவுகளையும் கடுமையாக பாதிக்கும் என்று திறந்த மனதுடன் பேசி அதிர வைத்துள்ளார் ஜனநாயக கட்சியை சேர்ந்த பெண் எம்பியான சிட்னி கமலாகர்-டோவ்.
பெரியண்ணன் மனப்பான்மையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் அதிபர் டிரம்ப், இந்தியா மீது போட்டுள்ளது தவறான கணக்கு என்பதை கட்சி பேதமின்றி அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய பிரதிநிதிகள் தெளிவாக்கியுள்ளனர். இதன்மூலம் அமெரிக்காவின் முக்கியத்துறைகளில் இந்தியர்களின் பங்களிப்பு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் உலகநாடுகளுக்கு உணர்த்தியுள்ளனர். அதேநேரத்தில் பொருளாதார வளர்ச்சியின் தூண்களாக இந்தியர்கள் இருப்பதையும், அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள், பிரதிபலித்துள்ளனர்.
இவை அனைத்திற்கும் மேலாக டிரம்பின் இதுபோன்ற அதிகாரப்போக்கு ‘இந்தியாவுடன் உறவை இழந்த முதல் அதிபர்’ என்ற வரலாற்று பிழையை உருவாக்கும் என்றும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த பிழை நேராத வகையில் தனது செயல்பாடுகளை திருத்திக் கொள்வாரா டிரம்ப் என்பது இன்றைய மில்லியன் டாலர் கேள்விகளில் ஒன்று.