தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எலக்ட்ரிக் வாகன மானிய திட்டம் தொடருமா?

Advertisement

தவிக்கும் நிறுவனங்கள் குழப்பத்தில் வாடிக்கையாளர்கள்

பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்கவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையிலும் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஒன்றிய அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்காக ஃபேம் திட்டம் 2015ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 2019ம் ஆண்டு வரை இந்த திட்டத்துக்காக ரூ.895 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் ஃபேம் - 2 திட்டம் கடந்த நிதியாண்டு இறுதியான மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதற்காக ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, நடப்பு நிதியாண்டில் ஆண்டில் ஜூலை 31ம் தேதி வரை இஎம்பிஎஸ் (எலக்ட்ரிக் வாகன ஊக்குவிப்பு திட்டம் - 2024) என்ற திட்டத்தை ஒன்றிய அரசு புதிதாக அறிமுகம் செய்தது. இதன்பிறகு, இதற்கு மாற்றாக மீண்டும் ஃபேம்-3 திட்டம் கொண்டுவரப்படும் என ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்த அறிவிப்பும் ஒன்றிய பட்ஜெட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், எலக்ட்ரிக் வாகன மானிய திட்டம் எதுவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ஃபேம் - 3 திட்டம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, கனரக தொழிற்துறை அமைச்சர் எச்.டி.குமாரசாமி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இருப்பினும் எப்போது செயல்படுத்தப்படும் என்ற உறுதியான அறிவிப்பு வராதது, மின் வாகன உற்பத்தி நிறுவனங்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இனியும் தாமதம் ஆனால், புதிதாக உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள் மின் வாகன மானிய திட்டத்தில் சேர தகுதியானவைதானா என ஆய்வு நடத்தி, பரிசோதனைகள் செய்து அங்கீகாரம் பெற வேண்டும். அதற்கு 2 மாதங்கள் வரை ஆகிவிடும். இது குறித்த எந்த அறிவிப்பும் இல்லாததால் மின் வாகன உற்பத்தி நிறுவனங்களும், வாடிக்கையாளர்களும் குழப்பமும், தவிப்பும் அடைந்துள்ளனர்.

 

Advertisement