உத்தராகண்டில் அடுத்தடுத்து 3 இடங்களில் காட்டாற்று வெள்ளம்: மூழ்கிய கிராமம்; மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல்
டேராடூன்: உத்தரகாண்ட்டில் மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் ஏற்பட்டது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள தாரல்லி, சுஹி டாப், ஹர்சில் ஆகிய 3 இடங்களில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. தாரல்லியில் மேகவெடிப்பால் பெய்த கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. உத்தரகாசியின் தராலியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 50-க்கும் மேற்பட்டோரும், கட்டடங்களும் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க 150 ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு படையினரும் ராணுவத்துடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தாரல்லியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்த நிலையில் 50 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே உத்தராகண்ட் காட்டாற்று வெள்ள பாதிப்பு குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்தனர். உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமியிடம் தொலைபேசி மூலம் நிலைமையை கேட்டறிந்தனர்.