தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நடைப்பயணத்துக்கு வட்டி துட்டு செலவாகப் போவதைப் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

Advertisement

‘‘மாஜிக்கள் இடையே போட்டி அதிகமா இருக்கு போல..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்டத்திற்கு மக்களை சந்திக்க சேலத்துக்காரர் வருகை தரவுள்ளதால் மணியானவர் தனது ஆதரவாளர்களும் கூட்டம் நடத்தி வருகிறார். தலைமையிடத்தில் இருந்து வரும் போது எப்படியாவது தனது பலத்தை நிருப்பிக்க வேண்டும். இல்லையெனில் தேனிக்காரர் அணியில் இருந்து விலகி சேலத்துக்காரர் அணியில் இணைந்த மாஜி அமைச்சருக்கு பொறுப்பு கிடைத்துவிடும். அந்த பொறுப்பை கிடைக்கவிடாமல் இருக்க மணியானவர் தனது ஆதரவாளர்களுடன் பம்பரமாக சுற்றி வருகிறார்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தடையில்லாமல களைகட்டுதாமே வெளிமாநில சரக்கு விற்பனை..’’ என அடுத்த கேள்விக்கு தாவினார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டத்துல பட்டு என்று முடியுற தாலுகா இருக்குது. இந்த தாலுகா ஸ்டேட் பார்டரை ஒட்டி அமைச்சிருக்குது. அதாவது ஆந்திரா, கர்நாடகான்னு 2 ஸ்டேட் பார்டராக இருக்குது. இதனால, ஆந்திரா, கர்நாடகாவுல இருந்து ஈசியாக அந்த மாநிலங்களோட மதுபாட்டில்களை கடத்தி வர்றாங்களாம். கடத்துற மதுபாட்டில்கள் விற்பனை ஜோராக நடக்குதாம்.

விலையும் குறைவாக கிடைக்குதாம். இப்படி ஒவ்வொரு ஊருக்கும் 2, 3 வியாபாரிங்க இருக்குறாங்களாம். இந்த வியாபாராம் நாளுக்கு நாள் அதிகரிச்சுக்கிட்டு வேற போகுதாம். சம்மந்தப்பட்ட லிமிட் காக்கிகளுக்கும், கலால் காக்கிகளுக்கும் விஷயம் ெதரியுமாம். அந்த வியாபாரிங்க கிட்ட வாங்க வேண்டியதை வாங்கிட்டு, தகவல் கொடுக்குறவங்களையும் அந்த வியாபாரிங்க கிட்ட போட்டு கொடுத்துடுறாங்களாம். மொத்தத்துல வெளிமாநில சரக்கு விற்பனை எந்த தடையுமில்லாம ஜோரா களைகட்டுதாம். இத உயர் அதிகாரிங்க கண்காணிச்சு நடவடிக்கை எடுக்க கோரிக்கை குரல் ஒலிக்க தொடங்கியிருக்குது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வட்டி துட்டை நடைபயணத்துக்கு செலவு செய்யபோறாராமே இலைக்கட்சி தலைவர்..’’ என ஆச்சர்யமாக கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி தலைமையில் மிகப் பிரமாண்டமான கூட்டணியை அமைத்தே தீருவேன் என சபதம் செஞ்சதோடு, கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்தினாராம் இலைக்கட்சி தலைவர்.. இன்னொரு முறை முதல்வர் சீட்டில் அமர்ந்தே ஆகணும் என்பது, அவரோட ஆசையா இருந்துச்சாம்.. ஆனால், இவர் யாரை நம்பி அப்படி சொன்னாரோ, அந்த நடிகர் நான் தான் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லிட்டாராம்.. அதுவும் பாஜவுடன் கூட்டணி சேரமாட்டோம் என சத்தியம் செஞ்சிட்டாராம்..

அதே நேரத்தில் இலைக்கட்சி தலைவருக்கு தேர்தலில் துட்டு ஒரு பொருட்டே இல்லையாம்.. அவரது நாலாண்டு கால ஆட்சியின்போது, கொங்கு பகுதிகளை சேர்ந்த தொழிலதிபர்கள், கல்வி நிறுவனங்களில் பணத்தை சேமித்து வைத்திருப்பதாக கட்சிக்காரர்கள் சொல்றாங்க.. இந்த டெபாசிட் மூலம் குறைந்தது தினமும் ஒன்றரை கோடி வருமானம் வருதாம். ஆனால் அந்த தொழிலதிபர்களோ, 50 பைசாவுக்கு இலைக்கட்சி தலைவருக்கு வட்டி கொடுத்து விட்டு, அவர்கள் ஒன்று மற்றும் ரெண்டு ரூபாய்க்கு வட்டி வசூலிப்பதாகவும் நிர்வாகிகள் சொல்றாறங்க..

இதனால் எத்தனை தேர்தல் வந்தாலும், எங்களது தலைவரை யாரும் டச் செய்ய முடியாதுன்னு நெஞ்சை நிமித்துறாங்களாம்.. இதற்கிடையில் நடை பயணத்திற்கு இந்த வட்டிப்பணம் வாரி வீசப்படும் எனவும் சொல்லப்படுது... மாங்கனி மாநகரில் எங்கெல்லாம் காலியிடம் இருக்கிறதோ அந்த பட்டியல், புரோக்கர்கள் மூலமாக இலைக்கட்சி தலைவரின் கவனத்திற்கு வந்திடுமாம்.. இப்படி கிடைத்த இடத்தில் தான், மாநகரில் கட்சிக்கு ஆபீஸ் கட்டப்பட்டு வருதாம்.. தனது பெயரில் இடங்களை வாங்கினால், பின்னாளில் பிரச்னை வரும் என தெரிந்து கொண்ட இலைக்கட்சி தலைவர், தனக்கு நெருங்கியவர்கள் பெயரில் தான் பதிவு செய்வாராம்..

இவ்வாறு பதிவு செய்தவர்கள் ஏராளமானோர், இலைக்கட்சி தலைவருக்கு அல்வா கொடுத்திட்டாங்களாம்.. இதனால யாரைத்தான் நம்புவது என்று தெரியாமல் திணறி போயிருக்காராம். இந்த குழப்பத்திற்கிடையில் ரூ.10 கோடி மதிப்பிலான இடத்தை, வீட்டில் சமையல் ெசய்யும் மிகவும் நம்பிக்கையான ஆயா பெயரில் பதிவு செஞ்சியிருப்பதாக கட்சிக்காரங்க கிசுகிசுக்கிறாங்க. நாங்க எல்லாம் இருக்கும்போது ஆயா பெயரில் நிலப்பதிவா, இருக்கவே இருக்காதுன்னு அவரது நெருங்கிய அடிப்பொடிகள் அடிச்சி சொல்றாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘எல்லாம் மேலிடம் பாத்துக்கும் என உண்மை நிலையை சொல்லி விளங்க வைத்துவிட்டாராமே கதர் தலைவர்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கடைக்கோடி மாவட்டத்தில் கதர் கட்சி சார்பில் கிராம அளவில் அமைக்கப்பட்ட அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில தலைவர் கலந்துகொண்டார். கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சீனியர்கள் உள்ளிட்ட தலைவர்கள் கூடுதல் தொகுதிகளை கேட்டுப்பெற வேண்டும், இனி யாரும் எங்கள் கட்சி எங்கே இருக்கிறது என்று கேட்க மாட்டார்கள், அந்த அளவு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

எனவே அதிக இடங்களில் போட்டியிட வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டும் என்றெல்லாம் தொண்டர்களை உற்சாகமூட்டும் வகையில் பேசிய வண்ணம் இருந்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய மாநில தலைவரோ தங்களது பேரியக்கம் மாநில அளவில் உள்ளது அல்ல, அகில இந்திய இயக்கம். எனவே அகில இந்திய தலைமைதான் அவற்றை எல்லாம் முடிவு செய்யும் என்று ஒரே போடாக போட்டுவிட்டார். இதனை கேட்ட தொண்டர்கள், தலைவர் பொறுப்போடு பேசுகிறார் என்று சிலாகித்தனர்..’’ என்றார் விக்கியானந்தா.

Advertisement

Related News