தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாமிசம் உண்பவர்களை குறிவைத்து காதலித்த பிரபல மாடல் அழகியின் 9 காதலர்கள் யார்..? 57 வயதாவதால் ‘சைவத்துக்கு மாற்றும்’ முயற்சி நிறுத்தம்

லண்டன்: பிரபல பீட்டில்ஸ் இசைக்குழு பாடகர் பால் மெக்கார்ட்னியின் முன்னாள் மனைவி, தனது காதல் வாழ்க்கை மற்றும் வினோத பழக்கவழக்கங்கள் குறித்து பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார். பிரபல மாடல் அழகியும், தீவிர சைவ உணவு ஆர்வலருமான ஹீதர் மில்ஸ், பீட்டில்ஸ் இசைக்குழுவின் புகழ்பெற்ற பாடகர் பால் மெக்கார்ட்னியின் முன்னாள் மனைவி ஆவார். இவரது காதல் வாழ்க்கை எப்போதும் ஊடகங்களில் பேசு பொருளாக இருந்து வருகிறது. இவர் தனது முதல் கணவரான அல்ஃபி கார்மலை 1989ல் திருமணம் செய்து, இரண்டு ஆண்டுகளில் விவாகரத்து பெற்றார்.

Advertisement

தொடர்ந்து, ஆயுத வியாபாரி அத்னான் கஷோகி, ஸ்லோவேனிய பனிச்சறுக்கு பயிற்சியாளர் மிலோஸ் போகர், இத்தாலிய நிதியாளர் ரஃபேல் மின்சியோன், பிரிட்டிஷ் ஊடக நிர்வாகி மார்கஸ் ஸ்டேபிள்டன், ஆவணப்பட தயாரிப்பாளர் கிறிஸ் டெர்ரில் என பலருடன் இவருக்குத் தொடர்பு இருந்தது. இவர்களில் பலருடன் ஹீதர் மில்ஸுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தபோதும், அவை திருமணத்தில் முடியவில்லை. குறிப்பாக, கிறிஸ் டெர்ரிலுடனான திருமணம், குறிப்பிட்ட திருமண தேதிக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு நின்றது. இறுதியாக, 1999ல் பால் மெக்கார்ட்னியுடன் ஏற்பட்ட பழக்கம் காதலாகி, 2002ல் திருமணமாக முடிந்தது. இவர்களுக்கு பீட்ரைஸ் என்ற மகள் உள்ள நிலையில், 2008ல் இந்த ஜோடி விவாகரத்து பெற்றது.

இதுவரை ஹீதர் மில்ஸ் 9 பேருடன் காதல் உறவில் இருந்துள்ளார். சமீபத்தில் தனது காதல் வாழ்க்கை குறித்து மனம் திறந்த ஹீதர் மில்ஸ், ‘நான் மாமிசம் உண்பவர்களை மட்டுமே உயிருக்கு உயிராக காதலிப்பேன். அவர்களை சைவத்திற்கு மாற்றுவேன்; பின்னர் அவர்களைக் கழற்றிவிட்டு அடுத்தவரைத் தேடிச் செல்வேன். இப்படி பலரைக் காதலித்த நான், இறுதியாக ஒருவருடன் நிலைத்துவிட்டேன்’ என்று குறிப்பிட்டார்.

கடந்த 2019ம் ஆண்டு முதல், தன்னைவிட 17 வயது இளையவரான திரைப்படத் தயாரிப்பாளர் மைக் டிக்மேனுடன் ஹீதர் மில்ஸ் உறவில் உள்ளார். ரயிலில் சந்தித்த இவர்களது காதல், 2021ல் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அவரையும் சைவ உணவுப் பழக்கத்திற்கு மாற்றிய பிறகு, ‘அவரை என்னால் கைவிட முடியவில்லை’ என்று ஹீதர் மில்ஸ் குறிப்பிட்டுள்ளார். தற்போது, 57 வயதான ஹீதர் மில்ஸ், கடைசியாக திருமணம் செய்து கொண்ட மைக் டிக்மேனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

Advertisement