தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாட்ஸ் அப் , டெலிகி​ராம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்த ஆக்டிவ் சிம் கார்டு கட்டாயம் - தொலைத்தொடர்பு துறை அதிரடி

புதுடெல்லி: வாட்ஸ் அப், டெலிகி​ராம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்த சிம்கார்டு பயன்பாட்டில் இருக்க வேண்டும் என தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது. இந்​தி​யா​வில் வாட்ஸ் அப், சிக்​னல்,  பேஸ்​புக், டெலிகி​ராம், இன்​ஸ்​டாகி​ராம், அரட்​டை, ஜியோ சேட், ஸ்னாப்​சேட், சேர் சாட் உள்​ளிட்ட பல சமூக வலை​தள செயலிகளை பயன்​பாட்​டில் உள்​ளன. இவற்றை செல்போனில் பதிவிறக்கம் செய்யும் போது சிம் கார்டு அவசியம். இதன் பிறகு, சிம் கார்டை அகற்றினாலோ அல்லது சிம் கார்டு செயல் இழந்தாலோ கூட செயலிகள் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும். இணையத்தின் உதவியுடன் அவற்றை பயன்படுத்தலாம். இந்த நிலையில் இதனை பயன்படுத்தி சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

Advertisement

இதனால் இனி மொபைல் போனில் ஆக்டிவ் சிம்கார்டு இருந்தால் மட்டுமே வாட்ஸ் அப், டெலிகி​ராம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்த முடியும் என்றும் சிம்கார்டு இல்லை என்றால் சமூக வலைத்தள செயலிகள் தானாகவே செயலிழந்துவிடும் என்றும் ஒன்றிய தொலைத்தொடர்பு துறை புதிய விதிகளை வகுத்துள்ளது. இந்த புதிய விதியை 90 நாட்களுக்குள் அமல்படுத்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல மொபைல் போனில் செயலிகளை பதிவிறக்கம் செய்யாமல் கணினியில் இணையதளம் வாயிலாக இந்த செயலிகளை பயன்படுத்தினால், பாதுகாப்பு கருதி ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் ஒருமுறை தானாகவே லாக் அவுட் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மீண்டும் பயன்படுத்த, கியு ஆர் குறியீடு வாயிலாக இணைத்துக் கொள்ளும் வசதியை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.

Advertisement

Related News