தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எதில் முதலீடு செய்தால் லாபம்: தங்கத்தை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு பிட்காயின் விலையும் புதிய உச்சம்

புதுடெல்லி: சமீபகாலமாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தில் உயர்ந்து வருகிறது. இதற்கு சர்வதேச சூழல், அரசியல் பதற்றங்கள், பொருளாதார சூழலும் முக்கியமான கரணம் என சொல்லப்படுகின்றன. இதற்கிடையில் தங்கத்தை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு பிட்காயின் விலையும் புதிய உச்சத்தை தொற்றுள்ளது. பிட்காயின் விலை ஒரு கோடியை தாண்டிய நிலையில், வர்த்தகத்தில் அதின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகின் மிகப்பிரபலமான கிரிப்டோ நாணயமான பிட்காயின் கடந்த வாரங்களில் தனது உச்சமற்ற விலையான 1,25,617 அமெரிக்க டாலர் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

Advertisement

இதன் இந்திய மதிப்பு சுமார் ஒரு கோடியே நான்கு லட்ச ரூபாய் ஆகும். இதன்முலம் ஒரு பிட்காயின் விலை ஒருகோடி ரூபாவை தண்டி வர்த்தகம் செய்யப்படுவது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக கணிசமான விலை ஏற்று தாழ்வுகளை சந்தித்த பிட்காயின் மின்னல் வேகத்தில் உயர தொடங்கியுள்ளது. கிரிப்டோ சந்தையின் எதிர்காலம் குறித்து முதலீட்டாளர்களின் நம்பிக்கை மீண்டும் உறுதியாகியுள்ளது. பெரிய அளவிலான நீதி நிறுவனங்களும், கார்பெர்ட் நிறுவனங்களும் பிட்காயினில் அதிகளவில் முதலீடு செய்ய தொடங்கியிருப்பது அதன் மதிப்பு அதிகரிக்க கரணமாக கூறப்பட்டுள்ளது.

பிட்காயின் இந்த அதிரடி விலை உயர்வுடன் சந்தையில் உள்ள பிறமுக்கிய கிரிப்டோ நாணயங்களான இத்தீரியம் மற்றும் சுலானா போன்றவையும் இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளன. இது ஒட்டுமொத்த கிரிப்டோ சந்தைக்கும் புத்துயிர் அளித்துள்ளது. பிட்காயின் விலை ரூ.1,25,000 டாலர் வரம்புக்கு மேல் நிலைத்திற்குமா என்பதை முதலீட்டாளர்கள் மிக தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அக்டோபர் 15ஆம் தேதியான இன்று அதன் மதிப்பு ரூ.99லட்சத்து 31,112ஆக உள்ளது. இந்த நிலையில், இது நிமிடங்களுக்கு நிமிடம் மாறிக்கொண்டு தான் இருக்கிறது.

உலகளவில் பாதுகாப்பான முதலீடாக தங்கம் பார்க்கப்படும் நிலையில், ஆண்மை காலமாக முதலீட்டாளர்கள் பார்வை கிரிப்டோ கரண்சியில் பக்கம் திரும்பி இருக்கிறது. 2025ஆம் ஆண்டு பொறுத்தவரை தங்கம் எப்படி வரலாறு காணாத உச்சத்தை எட்டியதோ அதே போல் பிட்காயின் மதிப்பும் இந்த ஆண்டு பலமடங்கு உயர்ந்து இருக்கிறது. கடந்த 5ஆண்டு காலத்தில் பிட்காயின் மதிப்பு 984 சதவீதம் உயர்ந்துள்ளது. 2020-ல் இருந்து 2025 வரையிலான காலத்தில் தங்கத்தின் மதிப்பு 37சதவீதம் தான் உயர்ந்திருக்கிறது.

இந்த ஆண்டு முதலீட்டாளர்களுக்கு லாபம் தந்த முதலீடாக இருந்தாலும் கடந்த 5ஆண்டுகளில் பார்க்கும் போது பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு 84சதவீதம் லாபத்தை தந்திருக்கிறது என்று சொல்லலாம். இந்தியாவில் பிட்காயின் மற்றும் கிரிப்டோ நாணயங்கள் சட்டப்பூர்வமாக தடை செய்யப்பட்டிருந்தாலும் இந்த உலகளவில் விலை உயர்வு இந்திய முதலீட்டாளர்கள் மத்தியில் மிக கவனத்தை பெற்றுள்ளது. ஆனால் பிட்காயின் திடீர் என வரலாத காணாத உச்சத்தையும், ஒரே நாளில் பலமடங்கு சரிவையும் காணும் ஒரு முதலீடாக இருக்கிறது.

Advertisement

Related News