அனைத்து கட்சிகளையும் சரிசமமாக நடத்துகிறோம்: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பேட்டி!
சிலர் மக்களிடம் அவதூறு பரப்பி வருகின்றனர்; அது எந்த வகையிலும் எங்களை பாதிக்காது என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பேட்டி அளித்துள்ளார். அனைத்து கட்சிகளையும் சரிசமமாக நடத்துகிறோம். பீகார் வாக்காளர் சிறப்பு பட்டியல் திருத்தம் பற்றி தவறான தகவல் பரப்பப்படுகிறது. வாக்கு திருட்டு நடந்ததாக ராகுல் காந்தி குற்றம்சாட்டிய நிலையில் தேர்தல் ஆணையர்கள் விளக்கம் அளித்துள்ளார்.