மே.வங்க காங்கிரஸ் அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் கைது
கொல்கத்தா: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நடத்தி வரும் யாத்திரை தர்பங்காவில் நடந்த போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பிரதமர் மோடி மற்றும் அவரது தாயார் ஹிராபென் பற்றி அவதூறாக பேசும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் ஆத்திரம் அடை பா.ஜவினர் பீகார் காங்கிரஸ் தலைமையகத்தை சூறையாடினர். இதே போல் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலுள்ள காங்கிரஸ் தலைமையகத்தை பாஜ ஆதரவாளர்கள் சேதப்படுத்தினர். இதுதொடர்பாக முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான சந்தோஷ் ராஜ்வா மற்றும் அவரது கூட்டாளிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உள்ளூர் பாஜ பிரமுகர் ராகேஷ் சிங்கை போலீசார் தேடி வருகிறார்கள்.
Advertisement
Advertisement