பகலிரவு டெஸ்ட்டில் வெஸ்ட்இண்டீஸ் 143 ரன்னில் சுருண்டது
கிங்ஸ்டன்: வெஸ்ட்இண்டீஸ்-ஆஸ்திரேலியா இடையே 3 டெஸ்ட் கொண்ட தொடரில் முதல் 2 டெஸ்ட்டிலும் ஆஸி.வெற்றிபெற்ற நிலையில் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் பகலிரவு போட்டியாக கிங்ஸ்டனில் நடந்து வருகிறது. இதில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 229 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட்இண்டீஸ் முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன் எடுத்திருந்தது. 2வது நாளான இன்று அந்த அணி 52.1 ஓவரில் 143 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜான் காம்ப்பெல் 36, ஷாய் ஹோப் 23 ரன் எடுத்தனர்.
ஆஸ்திரேலிய பவுலிங்கில் போலண்ட் 3, ஹேசல்வுட், கம்மின்ஸ் தலா 2 விக்கெட் எடுத்தனர். பின்னர் 82 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 99 ரன் எடுத்திருந்தது. கேமரூன் கிரீன் 42, கம்மின்ஸ் 5 ரன்னில் களத்தில் இருந்தனர். 4 விக்கெட் கைவசம் இருக்க ஆஸி. 181 ரன் முன்னிலை பெற்றுள்ளது.