ரயில் நிலையங்களில் எடை கட்டுப்பாடு: புதிய விதிகள்
சென்னை: விமான நிலையங்களில் இருக்கும் எடை விதிகளை முக்கிய ரயில் நிலையங்களில் பின்பற்ற ரயில்வே முடிவு செய்துள்ளது. ரயில்களில் எவ்வளவு எடை எடுத்துச் செல்லலாம் என்ற விதி உள்ளது; ஆனால் பின்பற்றப்படுவதில்லை. பிரயாக்ராஜ், கான்பூர், மிர்சாபூர், அலிகார் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் எடை விதிகளை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏ.சி.முதல் வகுப்பு பயணிகள் 70 கிலோ, 2-ம் வகுப்பு 50 கிலோ, 3-ம் வகுப்பு, ஸ்லீப்பர்-க்கு 40 கிலோ, பொதுப்பெட்டியில் பயணிப்போர் 35 கிலோ எடையுள்ள பொருட்களை கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம். கூடுதலாக உள்ள உடைமைகளை லக்கேஜ் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement