செல்வப்பெருந்தகை கண்டனம் மாணவர்கள் உயர்கல்வியில் அரசியல் செய்யும் ஆளுநர்
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கலைஞர் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான சட்ட மசோதா கடந்த ஏப்ரல் 28ம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காத நிலையில், வேண்டுமென்றே காலம்தாழ்த்தி நேற்று மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளார். தமிழ்நாட்டு மாணவர்களின் உயர்கல்வியில் அரசியல் செய்யும் ஆளுநரின் இந்த நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது. கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.