வயநாடு நிலச்சரிவு எதிரொலி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களை கண்காணிக்க அரசு உத்தரவு
Advertisement
இதனால் மழை நேரத்தில் வருவாய் துறை, பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. அதிக மழை பெய்யும் இடங்களில் கண்காணிப்பு செய்யவும், மாவட்ட நிர்வாகத்திற்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக திண்டுக்கல், நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தேனி, திருப்பூர் என மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களை கண்காணிக்க அரசு அதிகாரிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். ஏற்கனவே இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement