வயநாட்டில் பள்ளிக்குள் புகுந்த யானை குட்டி: குட்டியை தாய் யானையுடன் இணைக்கும் முயற்சியில் வனத்துறை
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் தாயை பிரிந்து அரசு பள்ளிக்குள் புகுந்த குட்டி யானை கண்டு மாணவர்கள் அலறி அடித்து ஓடினர். குடுமன் பகுதி என்பது மூன்று மாநிலத்தை இணைக்கக்கூடிய பகுதியாக உள்ளது. குறிப்பாக கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் புல்பள்ளி என்னும் பகுதியில் இன்று அங்கு இருக்க கூடிய வனப்பகுதியில் இருந்து தாயை பிரிந்த குட்டி யானை ஒன்று ஊருக்குள் நுழைந்தது. அந்த குட்டி யானை எங்கு செல்வது என்று தெரியாமல் அங்கு இருக்ககூடிய அரசு பள்ளியில் வளாகத்தில் நுழைந்தது. இதை பார்த்த பள்ளி மாணவர்கள் அச்சம் அடைந்தனர்.
உடனடியாக அவர்கள் அலறி அடித்து ஓடுவதை தலைமை ஆசிரியர் பார்த்துள்ளார். அந்த குட்டி யானை பள்ளி வளாகத்தில் நுழைந்து தலைமை ஆசிரியை அறைக்குள் சென்றுள்ளது. உடனடியாக தலைமை ஆசிரியை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததன் பெயரில் வனத்துறையினர், அந்த பகுதிக்கு வந்து குட்டி யானையை மீட்டு தாயிடம் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பகுதி முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. வனத்துறையினர் தற்போது அந்த குட்டி யானை மீட்டு தாயிடம் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.