என் தந்தை இறந்தபோது எவ்வளவு துக்கம் அடைந்தேனோ அதே துக்கத்தை இப்போதும் அடைந்துள்ளேன்: வயநாட்டில் ராகுல்காந்தி உருக்கம்
05:29 PM Aug 01, 2024 IST
Share
வயநாடு: என் தந்தை இறந்தபோது எவ்வளவு துக்கம் அடைந்தேனோ அதே துக்கத்தை இப்போதும் அடைந்துள்ளேன் என வயநாட்டில் ராகுல்காந்தி உருக்கமாக தெரிவித்துள்ளார். பலர் தந்தை, தாயை மட்டுமின்றி குடும்பத்தையே இழந்துள்ளனர். இந்த துயரமான நேரத்தில் மக்களுடன் இருப்பது மிகவும் அவசியம். அரசியல் பிரச்சனைகளை பற்றி பேச இது சரியான நேரம் அல்ல என்றும் தெரிவித்தார். என் சகோதரன் ராகுலுக்கு என்ன கவலை உள்ளதோ அதேதான் எனக்கும் உள்ளது என்று பிரியங்கா காந்தி தெரிவித்தார்.