சென்னையில் உள்ள குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம்!
சென்னை: சென்னையில் உள்ள குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. குடிநீர் எரிகளான புழல் ஏரி, சோழவரம் ஏரி, கண்ணன்கோட்டை ஏரி, தேர்வாய்கண்டிகை ஏரிகளின் நீர் நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், நீர்இருப்பு 2,769 மில்லியன் கனஅடியாக உள்ளது.
1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில், நீர்இருப்பு 157 மில்லியன் கனஅடியாக உள்ளது. 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில், நீர்இருப்பு 260 மில்லியன் கனஅடியாக உள்ளது.