சாத்தனூர் அணையில் 15,000 கனஅடி நீர் திறப்பு: தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
திருவண்ணாமலை: சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறப்பு விநாடிக்கு 15,000 கன அடியாக அதிகரித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால், வட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரூர், ஊத்தங்கரை, கல்லாறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது அணையில் இருந்து நீர் திறப்பு விநாடிக்கு 15,000 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 9,000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் 15,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 113.60அடியாக உள்ள நிலையில் நீர்வரத்து 12,000 கன அடியாக உள்ளது.
அணையில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பப்பட்டுள்ளது. சாத்தூர் அணையில் இருந்து நீர்திறப்பு காரணமாக கரையோர மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொலமஞ்சனூர், திருவாதனூர், புதூர்செக்கடி, எடத்தனூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.