நீர்நிலையில் புதைக்கப்பட்ட உடல்களை தோண்டி எடுத்து சுடுகாட்டில் புதைக்க வேண்டும்: ஈரோடு மாவட்ட நிர்வாகத்திற்கு ஐகோர்ட் உத்தரவு
ஈரோடு: ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுகா சிவகிரியை சேர்ந்தவர் தெய்வசிகா மணி மற்றும் கிளாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பி.பேபி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எங்களின் விவசாய நிலத்திற்கு அருகே ஓடை புறம்போக்கு உள்ளது. இந்த ஓடை புறம்போக்கில் சிவகிரி கிராமத்தில் மரணமடைப வர்களின் உடல்களை புதைப்பதற்கு சிவகிரி பஞ் சாயத்து தலைவர் அனுமதி அளித்துள்ளார். இதனால், எங்கள் விவசாய நிலத்தில் உள்ள கிணறும், ஆழ்துளை கிணறும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி சிவகிரி கிராமம் அம்மன் நகரை சேர்தவரின் உடலை ஓடை புறம்போக்கில் புதைத்தனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத் திற்கு தகவல் கொடுத்தும் கொடுமுடி தாசில்தார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் கே.கார்த்திகேயன் ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் தாக்கல் செய்த மனுவில், மனுதாரர் குறிப்பிடும் இடம் ஓடை புறம்போக்குதான் என்று கூறப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சுடுகாட்டுக்கு ஒதுக்கப்படாத இடத்தில் இறந்தவர்களின் உடல்களை புதைக்க கூடாது என்று உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட ஓடை புறம்போக்கில் புதைக் கப்பட்ட உடல்களை தோண்டி எடுத்து சுடுகாட் டுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் புதைக்க வேண்டும். வருவாய் துறை அதி காரிகளுடன் ஆலோசித்து சிவகிரி பஞ்சாயத்து தலை வர் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதில் ஏதாவது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படு மானால் சிவகிரி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக் டர் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.