பருத்தி விலை குறைத்தாலும் கழிவுப்பஞ்சு விலை உயர்கிறது; நெருக்கடியில் கழிவு பஞ்சு நூற்பாலைகள்
கோவை: கழிவு பஞ்சு விலை உயர்வு காரணமாக ‘ஒ.இ.மில்ஸ்’ எனப்படும் கழிவு பஞ்சு நூற்பாலைகள் நெருக்கடிக்கு உள்ளாகி வருவதாக தொழில் துறையினர் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் சுமார் 600 ‘ஒ.இ. மில்ஸ்’ எனப்படும் கழிவு பஞ்சு நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. இந்த நூற்பாலைகள் ஸ்பின்னிங் மில்களில் இருந்து வரும் கழிவு பஞ்சுகளை வாங்கி, சுத்திகரித்து மறுசுழற்சி செய்து, நூல்களாக மாற்றி கைத்தறி மற்றும் விசைத்தறிகளுக்கு வழங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள சுமார் 60 சதவீத விசைத்தறிகள் இந்த நூல்களை பயன்படுத்தி துணிகளை தயாரித்து வருகின்றன. இந்த மில்களில் இருந்து பெறப்படும் நூல்கள் மூலம் மருத்துவ துணி, நைட்டி, லூங்கி, துண்டு போன்றவை தயாரிக்கப்படுகின்றன. தற்போது பருத்தி சீசன் காரணமாக ஒரு கேண்டி (356கிலோ) பருத்திக்கு ரூ.6 ஆயிரம் வரை விலை குறைந்துள்ளது. அதற்கு மாறாக கழிவு பஞ்சு விலை அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக ஒ.இ. மில்களில் உற்பத்தி நெருக்க்டி ஏற்பட்டுள்ளது. இது குறித்து மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு (ஆர்டிஎப்) தலைவர் ஜெயபால் கூறியதாவது: தமிழகத்தில் 8.5 லட்சம் ரோட்டார் திறன் கொண்ட ஓ.இ நூற்பாலைகளில் 3.5 லட்சம் ரோட்டார்களில் கிரே நூல், 5 லட்சம் ரோட்டார்கள் மூலம் சலவை, கலர், மிலான்ஜ், காட்டன் பாலியஸ்டர், விஸ்கோஸ் காட்டன், விஸ்கோஸ் பாலியஸ்டர் என 2 முதல் 40 கவுன்ட் வரையிலான பல்வேறு ரகம் மற்றும் 45 மேற்பட்ட கலர் நூல்களை உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், கரூர், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள விசைத்தறிகளுக்கு கிரே நூல்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த நான்கு மாதங்களாக 30 கவுன்ட் வீவிங் நூல்களுக்கு போதிய ஆர்டர்கள் இல்லாத காரணத்தால் உற்பத்தி குறைந்து ஓ.இ நூல்களும், ஜவுளி பொருட்களும் தேக்கம் அடைந்துள்ளன.
20 ரக நூல்களை கொண்டு உற்பத்தி செய்த காடா ரகத்துக்கு தீபாவளிக்கு பின் வட இந்திய காடா வர்த்தகர்களிடம் இருந்து பணம் திரும்ப வரவில்லை என கூறி, விற்பனை செய்த நூலுக்கும் தற்போது கொள்முதல் செய்ய தயக்கம் காட்டுவதால் நூற்பாலைகள் விற்பனை அழுத்தத்தில் விலை குறைத்து விட்டால் காடா விலை அனைத்தும் சரிந்து விடும் என்ற அச்சம் உள்ளது. பருத்தி ஒரு கேண்டி (356 கிலோ) விலை ரூ. 4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை குறைந்ததால் ஸ்பின்னிங் நூற்பாலைகள் நாடு முழுவதும நூல் விலையை ஒரு கிலோவிற்கு ரூ.5 முதல் ரூ.10 வரை கடந்த மாதம் குறைந்துள்ளன. ஆனால் ஸ்பின்னிங் மில்களில் இருந்து வெளியேறும் கழிவுப் பஞ்சின் விலையை கடந்த இரண்டு மாதங்களில் ஒரு கிலோவிற்கு ரூ.8 வரை உயர்த்தியுள்ளனர். தேசிய பஞ்சாலை கழக மில்கள் இருந்தவரை டெண்டர் மூலம் கழிவுபஞ்சுகள் கிடைத்து வந்தன.
தற்போது அவை இயங்காததால், தனியார் மில்கள் வைப்பது தான் விலையாக உள்ளது. இந்த விலையில் கழிவு பஞ்சை வாங்கி, நூலை உற்பத்தி செய்து எங்களால் விற்பனை செய்ய முடியாது. அதேபோல விசைத்தறி, கைத்தறிகளுக்கான நூல் விலையையும் உயர்த்த முடியாது. இதனால் ஒ.இ.மில்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த மாத விலைக்கே கழிவு பஞ்சு வாங்குவது என்றும், விலை குறையவில்லை என்றால், நஷ்டத்தை தவிர்க்க கையிருப்பில் உள்ள கழிவுப் பஞ்சு உள்ளவரை இயக்குவது என முடிவு செய்துள்ளோம். அதுவரையிலும் விலை குறையவில்லை எனில், உற்பத்தி நிறுத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் 8.5 லட்சம் ரோட்டார் திறன் கொண்ட ஓ.இ நூற்பாலைகளில் 3.5 லட்சம் ரோட்டார்களில் கிரே நூல், 5 லட்சம் ரோட்டார்கள் மூலம் சலவை, கலர், மிலான்ஜ், காட்டன் பாலியஸ்டர், விஸ்கோஸ் காட்டன், விஸ்கோஸ் பாலியஸ்டர் என 2 முதல் 40 கவுன்ட் வரையிலான பல்வேறு ரகம் மற்றும் 45 மேற்பட்ட கலர் நூல்களை உற்பத்தி செய்யப்படுகிறது.
பருத்தி ஒரு கேண்டி (356 கிலோ) விலை ரூ. 4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை குறைந்ததால் ஸ்பின்னிங் நூற்பாலைகள் நாடு முழுவதும நூல் விலையை ஒரு கிலோவிற்கு ரூ.5 முதல் ரூ.10 வரை கடந்த மாதம் குறைந்துள்ளன. ஆனால் ஸ்பின்னிங் மில்களில் இருந்து வெளியேறும் கழிவுப் பஞ்சின் விலையை கடந்த இரண்டு மாதங்களில் ஒரு கிலோவிற்கு ரூ.8 வரை உயர்த்தியுள்ளனர்.
கழிவு பஞ்சை வாங்கி, நூலை உற்பத்தி செய்து எங்களால் விற்பனை செய்ய முடியாது. அதேபோல விசைத்தறி, கைத்தறிகளுக்கான நூல் விலையையும் உயர்த்த முடியாது. இதனால் ஒ.இ.மில்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விலை குறையவில்லை எனில், உற்பத்தி நிறுத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.