வாஷிங்டன் ஓபன் டென்னிஸ்; லெய்லா சாம்பியன்: ரூ.3.65 கோடி பரிசு
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வாஷிங்டன் ஒபன் டென்னிஸ் போட்டிகள் நடந்தன. அரை இறுதிப் போட்டி ஒன்றில் கனடா வீராங்கனை லெய்லா அன்னி ஃபெர்னாண்டஸ் (22), ரஷ்யாவில் பிறந்து கஜகஸ்தானுக்காக ஆடி வரும் எலெனா ரைபாகினாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். மற்றொரு அரை இறுதியில் பிரிட்டன் வீராங்கனை எம்மா ராடுகனுவை (22) வீழ்த்தி, ரஷ்ய வீராங்கனை அன்னா காலின்ஸ்கயா (26) இறுதிக்கு முன்னேறினார்.
இந்நிலையில், லெய்லா - காலின்ஸ்கயா இடையிலான இறுதிப் போட்டி நேற்று நடந்தது. இப்போட்டியில் துவக்கம் முதல் துடிப்புடன் ஆடிய லெய்லா எவ்வித சிரமமும் இன்றி, 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். சாம்பியன் பட்டம் வென்ற லெய்லாவுக்கு, ரூ.3.65 கோடி பரிசு கிடைத்தது.
Advertisement