தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முடிவின்றி நீடிக்கும் போர் ரஷ்ய எல்லைக்குள் உக்ரைன் ராணுவம் தாக்குதல்: அதிபர் ஜெலன்ஸ்கி ஒப்புதல்

கீவ்: ரஷ்யாவின் குர்ஸ்க் எல்லைக்குள் உக்ரைன் ராணுவம் தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைன் - ரஷ்யா போர் 3வது ஆண்டாக நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல நகரங்கள் சிதிலமடைந்து விட்டன. ஏராளமான அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பதும் நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர ஐநா மற்றும் சில நாடுகள் எடுக்கும் சமாதான நடவடிக்கைள் எதுவும் பயன் தரவில்லை.
Advertisement

இந்த போரில் ஆரம்பத்தில் பலத்த அடி வாங்கிய உக்ரைன் தற்போது ரஷ்யா மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி ரஷ்யாவின் முக்கிய இலக்குகளை குறி வைத்து அவ்வப்போது ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக ரஷ்யா ஆக்கிரமித்துள்ள குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் ராணுவம் முன்னேறி தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து உக்ரைன் அதிபர் நேற்று முன்தினம் காணொலி செய்தி ஒன்றை வௌியிட்டார். அதில், “ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் ராணுவம் எல்லை தாண்டிய தாக்குதலை நடத்தி வருகிறது. ரஷ்ய எல்லைக்குள் 10கிமீ தூரத்துக்கு உக்ரைன் ராணுவம் முன்னேறி உள்ளது. ரஷ்யாவுக்குள் நடத்தப்படும் தாக்குதல்கள் பற்றி உக்ரைன் ராணுவ தளபதியுடன் ஆலோசிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்கள் மீது அழுத்தம் தர முடியும், நீதியை மீட்டெடுக்க முடியும் என்பதை உக்ரைன் நிரூபித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே கீவ் நகரத்தில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 4 வயது சிறுவன் உள்பட இருவர் உயிரிழந்தனர்.

Advertisement