வக்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜவாஹிருல்லா அறிக்கை
சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை: வக்பு செய்வதற்கு ஒருவர் குறைந்தது 5 ஆண்டுகள் இஸ்லாத்தை பின்பற்றிக் கொண்டிருக்கிறார் என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற திருத்த விதியை உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது., வக்பு திருத்தச் சட்டம் முற்றிலுமாக வக்பு சொத்துகளைப் பலவீனப்படுத்தி அபகரிக்கச் செய்யப்பட்ட திட்டமிட்ட சதியாகும். நவம்பர் மாதத்தில் நடைபெறும் இவ்வழக்கின் இறுதி விசாரணையின் போது தோழமை கட்சிகளின் வழக்கறிஞர்கள் இடைக்கால உத்தரவில் உள்ள சிக்கல்களை நிவர்த்தி செய்து அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான வக்பு திருத்தச் சட்டம் 2025ஐ முழுமையாக ரத்து செய்யும் வகையில் சட்டப் போராட்டங்களை நடத்த வேண்டும்.
Advertisement
Advertisement