வாலாஜா அரசு கல்லூரி என்எஸ்எஸ் முகாம் 5 ஆயிரம் பனை விதைகள் நட்ட மாணவிகள்
வாலாஜா : வாலாஜா அரசு கல்லூரி என்எஸ்எஸ் முகாமில் மாணவிகள் 5 ஆயிரம் பனை விதைகள் நட்டனர்.வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட முகாம் அனந்தலை ஊராட்சிக்கு உட்பட்ட எடகுப்பம் கிராமத்தில் நடந்து வருகிறது.
முகாமில், கல்லூரி மாணவிகள் பல்வேறு சேவை பணிகளை செய்து வருகின்றனர். அதன்படி, நேற்று எடக்குப்பம் கிராமத்தில் செங்காடு ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன் தலைமையில் மாணவிகள் மற்றும் விவசாயிகள் 5 ஆயிரம் பனை விதைகளை நட்டனர்.
அப்போது, அவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர்நிலைகளை மேம்படுத்துதல், பனை மரங்கள் மூலம் பல்லுயிர் பெருக்கத்தை பெருக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டதாக கூறினர்.
இதுபோன்ற முகாம்கள் மூலம் கல்லூரி மாணவர்களின் சமூக பொறுப்புணர்வை வளர்க்கும் ஒரு முக்கிய செயலாக அமைகிறது.
பனை மரம் நிலத்தின் வறட்சியை தாங்கி வளரக்கூடியது, நீர்நிலைகளை சுற்றிலும் நடுவதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இம்முகாம் மாணவிகள் கிராமப்புற சுற்றுப்புறத்தில் நேரடியாக பங்காற்றி, சமூகப் பொறுப்பை உணர்ந்து செயல்பட உதவுகிறது என்றனர்.