தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாலாஜா அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சென்னை வாலிபர் சடலம் மீட்பு

வாலாஜா: வாலாஜா அருகே ஆற்றுக்கால்வாய் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட சென்னை வாலிபர் உள்பட 2 வாலிபர்கள் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(21). இவர் சென்னை அடுத்த ஒரகடம் பகுதியில் உள்ள டிவி உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவருடன் சென்னை திருவொற்றியூரை சேர்ந்த அருண்(24), காவேரிப்பாக்கத்தை சேர்ந்த காந்திநாதன்(24), விக்னேஷ்(23), சுபாஷ்(26), செந்தில்(33), தினகரன்(28), தமிழன்சாமுவேல்(28), காஞ்சிபுரத்தை சேர்ந்த சாம்செல்வராஜ்(27) ஆகியோரும் வேலை செய்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் நேற்று விடுமுறை என்பதால், நண்பர்கள் அனைவரும் ஒன்றாக ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பாலாறு அணைக்கட்டு அருகே உள்ள பூண்டி கூன்மடை பாலாற்று பகுதிக்கு மதியம் வந்தனர். அங்கு அருண், மணிகண்டன் இருவரும் ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் கூன்மடை ஆற்றுக்கால்வாயில் குளித்தனர். மற்ற 7 பேர் கரையில் சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது மணிகண்டனும், அருணும் திடீரென வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள், அவர்களை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை மாவட்ட தீயணைப்பு வீரர்கள், ரப்பர் படகுடன் விரைந்து வந்து 2 வாலிபர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு 8 மணி வரை தேடியும் கிடைக்கவில்லை. இன்று காலை 2வது நாளாக தேடும் பணியை தொடங்கினர். சுமார் 9 மணியளவில், மணிகண்டன் மற்றும் அருண் சடலங்களை மீட்டனர்.

Advertisement

Related News