20 கிமீ நடை போட்டி மரியாவுக்கு தங்கம்
டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் பிரிவு 20 கிமீ நடை போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை மரியா பெரெஸ், ஒரு மணி நேரம், 25:54 நிமிடங்களில் போட்டி தூரத்தை கடந்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.
Advertisement
மெக்சிகோ வீராங்கனை அலெக்னா கோன்சலேஸை விட 12 விநாடிகள் முன்னிலை பெற்று இந்த சாதனையை மரியா நிகழ்த்தினார். இந்த தொடரில் கடந்த வாரம் நடந்த 35 கி.மீ தூர நடை போட்டியிலும் மரியா தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. ஆடவர் பிரிவில் பிரேசில் வீரர் கேய்யோ பான்ஃபிங் தங்கம் வென்றார்.
Advertisement