அனைத்து வாக்காளர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று புதிய வாக்களிப்பு சாதனையைப் படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி
டெல்லி: பீகார் சட்டமன்றத் தேர்தலில் இன்று இரண்டாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அனைத்து வாக்காளர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று புதிய வாக்களிப்பு சாதனையைப் படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 'குறிப்பாக முதல் முறையாக வாக்களிக்கும் இளம் நண்பர்கள், தாங்களாகவே வாக்களிப்பது மட்டுமல்லாமல், மற்றவர்களையும் அவ்வாறு செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்' எனவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement