தமிழ்நாட்டில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி அடுத்த வாரம் தொடங்கும்: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்
சென்னை: தமிழகம் உள்ளிட்ட தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் அடுத்த வாரம் தொடங்க இருப்பதாக ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை தி.நகரில் வாக்காளர் பட்டியலில் மொத்தமாக பெயர் சேர்ப்பு, நீக்கம் செய்யப்பட்டதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்தியநாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், அதிமுக ஆதரவாளர்கள் 13,000 நபர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழகத்தில் அடுத்த வாரம் முதல் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்தது. சிறப்பு தீவிர திருத்தம் அடுத்த வாரம் மேற்கொள்ளப்பட உள்ளதால் சத்தியநாராயணன் புகார் குறித்து விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தது. இதையடுத்து பீகாரில் SIR-க்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவுகளை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி அடுத்த வாரம் தொடங்கும் என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு உள்பட தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் அடுத்த வாரம் தொடங்கும் என்று கூறப்படுகிறது.