வாக்காளர் பட்டியலில் குளறுபடி உரிய நேரத்தில் ஆய்வு செய்யவில்லை: தேர்தல் ஆணையம் பதில்
புதுடெல்லி: தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சில அரசியல் கட்சிகளும் அவற்றின் பூத் அளவிலான முகவர்களும் சரியான நேரத்தில் வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்யவில்லை. கடந்த காலத்தில் தயாரிக்கப்பட்ட பட்டியல்களில் உள்ள பிழைகள் உட்பட இப்போது பிழைகள் குறித்த பிரச்னைகளை எழுப்புகிறார்கள்.வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்ட பிறகு, டிஜிட்டல் மற்றும் பிரதிகள் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பகிரப்பட்டு, தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றப்படும். இதனால் உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளுக்கு முழு அவகாசம் வழங்கப்படுகிறது. சில கட்சிகளும் அவற்றின் பூத் அளவிலான முகவர்களும் சரியான நேரத்தில் வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்யவில்லை. இந்தப் பிரச்னைகள் சரியான நேரத்தில் சரியான வழிகளில் எழுப்பப்பட்டிருந்தால், அந்தத் தேர்தல்களுக்கு முன்பே அவற்றைச் சரிசெய்து இருப்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.