தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாக்காளர் பட்டியலை திருத்தி ஆட்சிக்கு வர தப்புக்கணக்கு பாஜ கனவு தமிழ்நாட்டில் பலிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

சென்னை: தமிழ்நாட்டின் மீது தாக்குதல் தொடுக்கும் பாஜவின் பகல் கனவு திமுக இந்த மண்ணில் இருக்கும் வரை நிறைவேறாது. தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளும் தகுதி திமுகவுக்கே இருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட கூறினார். திமுக சார்பில் ‘என் வாக்குச்சாவடி -வெற்றி வாக்குச்சாவடி’ பயிற்சிக்கூட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள கான்ப்ளூயன்ஸ் அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா, திருச்சி சிவா முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கூட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.

Advertisement

கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 2026ல நடக்க இருக்க ஜனநாயகத் தேர்தல்-தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்குற தேர்தல். தனித்தன்மையோடு தலைநிமிர்ந்து நிற்குற நம்மோட ஆட்சியா, டெல்லிக்கு வளைந்து கொடுக்குற அடிமைகளின் ஆட்சியானு தீர்மானிக்குற தேர்தல். தமிழ்நாட்டோட சுயமரியாதையையும் - தனித்தன்மையையும் காப்பாத்தப்போற தேர்தல். தமிழ்நாட்டை அழிக்க-இன எதிரிகளும் தமிழ்த் துரோகிகளும் நேரடியாவும் மறைமுகமாவும் வர்றாங்க. இவங்கள வீழ்த்தி-நம்மோட மண்-மொழி-மானத்தை காக்கணும்.

அதுக்காகத்தான் திமுக கூட்டணி அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றியாகணும்னு தொடர்ந்து சொல்லிட்டு இருக்கேன். தமிழ்நாடு இப்போ சமூக, அரசியல், பொருளாதார படையெடுப்பை சந்திச்சு வருது. தமிழ்நாட்டுக்கு எல்லா வகையிலும் அநீதி இழைக்கப்படுது. இந்தியின் பேரால்-சமஸ்கிருதத்தின் பேரால்-ஜி.எஸ்.டி.யின் பேரால்-புதிய கல்விக் கொள்கையால்-நீட் தேர்வால்-சட்டங்களால்-உத்தரவுகளால் - ஆளுநரால் என தொல்லை மேல் தொல்லை கொடுக்குறாங்க. இது தமிழ்நாட்டு மேல தொடுக்கப்படும் தாக்குதல். இந்த தாக்குதல முறியடிக்குற வல்லமை நமக்குதான் இருக்கு.

பாஜவின் பகல்கனவு திமுக இந்த மண்ணில் இருக்கும்வரை நிறைவேறாது. அவங்களுக்கும் அது நல்லா தெரியும். ஆனாலும், புதுசு புதுசா குறுக்குவழிகளை தேடுறாங்க. S.I.R. எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்த தமிழ்நாட்டுல அடுத்த வாரத்துல நடைமுறைப்படுத்தப் போறதா இந்திய தேர்தல் ஆணையம் அறிவிச்சிருக்கு. இதைக் காட்டி மிரட்டுறாங்க. இதுக்கெல்லாம் நாம பணிய மாட்டோம். இங்க அவங்களோட ஆர்.எஸ்.எஸ். பாச்சா எதுவும் பலிக்காது. உழைக்கும் மக்கள், பட்டியல் இனத்தவர், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்டவர்களின் பெயர்களை S.I.R. மூலமா, வாக்காளர் பட்டியல்ல இருந்து நீக்கிட்டா பாஜவும் அதன் கூட்டாளியான அ.தி.மு.கவும் வெற்றிபெற்றுடலாம்-னு கணக்கு போடுறாங்க. அதாவது, நேரடியா தேர்தல் களத்துல மக்களைச் சந்திக்குற தெம்போ திராணியோ இல்லாதவங்க, மக்களோட வாக்குரிமைய பறிச்சிட்டு வெற்றி பெறலாம்னு தப்புக் கணக்கு போடுறாங்க.

S.I.R. முறைய கைவிடணும் என்பதையும்-வாக்காளர் பட்டியலைச் சீர்ப்படுத்தணும்னா அதுக்குரிய வழிமுறைகளைப் பின்பற்றி, கால அவகாசத்தை வழங்கணும் என்பதையும்-இந்திய தேர்தல் ஆணையத்திடம் நேரடியாவே திமுக வலியுறுத்தி இருக்கு. அதையும் மீறி முன்னெடுக்கப்படுற ஜனநாயக விரோத செயல்பாடுகளை, சட்டரீதியா எதிர்கொள்வது மட்டுமில்ல, மக்களோட நின்னு களத்துலயும் எதிர்கொள்ளுற வலிமை நமக்கு உண்டு, இன்னும் சொல்லப்போனா, நமக்கு மட்டும்தான் உண்டு. மக்களின் வாக்குரிமையையே பறிக்கத் துணியுற S.I.R. செயல்பாட்ட விழிப்போட கண்காணிக்கணும். உண்மையான வாக்காளர் எல்லாரும், வாக்காளர் பட்டியல்ல இடம்பெறணும். அத உறுதி செய்ய வேண்டியது உங்களோட பொறுப்பு.

எதிர்க்கட்சியான அதிமுக தன்னோட சொந்தக் கட்சியின் உரிமைகளையே பாஜகிட்ட அடகு வெச்சிட்ட நிலையில, மக்களோட உரிமைகளைப் பத்தி கவலைப்பட அதுக்கு நேரமிருக்காது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலயும் மக்களின் உரிமைகளை காக்க வேண்டியவர்கள் திமுகவினரும் தோழமைக் கட்சியினரும்தான் என்பதை மீண்டும் நினைவூட்டுறேன். மக்கள் நலனையும் மாநில உரிமைகளையும் காக்குற, திமுகவின் ஆட்சியில ‘தமிழ்நாடு தலைகுனியாது’-னு நான் உறுதி அளிக்கிறேன். தலைகுனிய விடமாட்டார்கள் திமுக உடன்பிறப்புகள் அதன் தலைவர் என்ற முறையில உறுதி ஏற்கிறேன்.

2021 தேர்தல் தமிழ்நாட்டை கொத்தடிமை அதிமுக கூட்டத்திடம் இருந்து மீட்ட தேர்தல். 2026 தேர்தல் என்பது தமிழ்நாட்டை பாஜ-அதிமுக கும்பலிடம் இருந்து பாதுகாப்பதற்கான தேர்தல். ஐந்தாண்டு காலம் வளப்படுத்தப்பட்ட தமிழ்நாட்டை கபளீகரம் செய்து நாசம் செய்ய திட்டமிடும் கூட்டத்தை-வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தியாகணும். எதிர்க்கட்சித் தலைவரா இருக்குற பழனிசாமி, பெயரளவுக்காவது திராவிட கட்சியா இருந்த-அந்தக் கட்சியை, அமித்ஷாகிட்ட விழுந்து சரண்டர் பண்ணிட்டாரு. அந்தக் கூட்டணியை தமிழ்நாட்டு மக்களும் விரும்பல; அவங்க கட்சிக்காரங்களும் விரும்பல.

மற்ற கட்சியினரும் அந்தக் கூட்டணிக்கு போகல. வி.சி.க. வர்றாங்க - கம்யூனிஸ்ட்டுகள் வர்றாங்க - காங்கிரஸ் வர்றாங்கனு அவரும் தினமும் சொல்லி பார்த்தார்.. ஆனா யாரும் அங்க போகல… மக்களும் அவர் பேசுறத நம்பத் தயாரா இல்ல. தமிழ்நாட்டுக்கு எதிரா கூட்டணி அமைச்சிருக்க அவரோட சந்தர்ப்பவாதத்தை மக்கள்கிட்ட எடுத்துச் சொல்லி, அவங்களோட நம்பிக்கையை பெற்று - அதை நம்ம கூட்டணிக்கான வாக்குகளா மாத்தணும். அந்த கடமையும் பொறுப்பும் உங்களுக்குத்தான் இருக்கு. திமுக 7வது முறையும் ஏற்றமிகு ஆட்சியை அமைக்கணும். தமிழ்நாட்டை நிரந்தரமா ஆளும் தகுதி திமுகவுக்கு தான் இருக்குனு நிரூபிக்கணும். கலைஞரின் உடன்பிறப்புகள், நினைச்சத செஞ்சு காட்டுவாங்க-னு புரிய வைக்கணும். இவ்வாறு அவர் பேசினார்.

* S.I.R. எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்த காட்டி மிரட்டுறாங்க.

* இதுக்கெல்லாம் நாம பணிய மாட்டோம்.

* இங்க அவங்களோட ஆர்.எஸ்.எஸ். பாச்சா எதுவும் பலிக்காது.

* உழைக்கும் மக்கள், பட்டியல் இனத்தவர், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்டவர்களின் பெயர்களை S.I.R. மூலமா, வாக்காளர் பட்டியல்ல இருந்து நீக்கிட்டா பாஜவும் அதன் கூட்டாளியான அ.தி.மு.கவும் வெற்றிபெற்றுடலாம்-னு கணக்கு போடுறாங்க.

* நேரடியா தேர்தல் களத்துல மக்களைச் சந்திக்குற தெம்போ திராணியோ இல்லாதவங்க, மக்களோட வாக்குரிமைய பறிச்சிட்டு வெற்றி பெறலாம்னு தப்புக் கணக்கு போடுறாங்க.

* திமுகவினருக்கு சைவ, அசைவ விருந்து கட்சியினருடன் சாப்பிட்டார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

திமுக சார்பில் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குசாவடி’ பயிற்சிக்கூட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள கான் ப்ளூயன்ஸ் அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்தில் சுமார் 3,000 பேர் பங்கேற்றனர். கூட்டம் முடிந்ததும் திமுகவினருடன் அமர்ந்து திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சாப்பிட்டார். தொடர்ந்து கட்சியினருக்கு உணவு வழங்கப்படுவதை பார்வையிட்டார். கூட்டத்தில் பஙகேற்றவர்களுக்கு பிரமாண்டமான சைவ, அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன. சைவ உணவில் மலாய் கோவா ஸ்வீட், ரோல் ரசமலாய், மால் பூவா ஸ்வீட், கத்தரிக்காய், மூக்குகடலை, வேர்க்கடலை, முந்திரி சாப்ஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி வறுவல், மலபார் அவியல், முந்திரி பகோடா, வெஜ் இறா 65, வெஜ் மட்டன் பிரியாணி, வெங்காயம் பச்சடி, ரூமாலிய ரொட்டி, பன்னீர் பட்டர் மசாலா, காயின் பரோட்டா, வெஜ் மட்டன் கிரேவி, ஒயிட் ரைஸ், சாம்பார், தஞ்சாவூர் வத்தகுழம்பு, மிளகு ரசம், தயிர், அப்பளம், ஊறுகாய், மோர் மிளகாய், வாட்டர் பாட்டில் 500மிலி இடம்பெற்றிருந்தது. அசைவ உணவில் மட்டன் பிரியாணி, இறால் தொக்கு, சிக்கன் கபாப், பிரட் அல்வா, தயிர் பச்சடி, கத்தரிக்காய் தொக்கு உள்ளிட்டவை பரிமாறப்பட்டன.

Advertisement

Related News