சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும்: எஸ்டிபிஐ வலியுறுத்தல்
சென்னை: எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கை: சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) கடும் விளைவுகளை ஏற்படுத்தலாம். , உண்மையான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படாமல் பாதுகாக்கப்பட, தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வாக்காளர்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும்.
மேலும், இந்திய ஜனநாயகத்தின் அடித்தளமான வாக்காளர் பட்டியலை உருவாக்கும் பணியை, உண்மையான பிரதிநிதித்துவத்தையும் நம்பகத் தன்மையையும் உறுதிப்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும். ஆகவே, தமிழக அரசு இதுகுறித்து உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற விசாரணையில் இருப்பதால் தமிழ் நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும்.