வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்
*கோடேரியில் சப்-கலெக்டர் ஆய்வு
ஊட்டி : குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோடேரி பகுதியில் எஸ்ஐஆர் எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை குன்னூர் சார் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
குறிப்பாக பாகம் எண் 210 கோடேரி பகுதியில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக சமூக ஆர்வலரும், ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியருமான மனோகரன், ெசன்னை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட கலெக்டர், குன்னூர் சார் ஆட்சியர் உள்ளிட்டோருக்கு மனுக்கள் அனுப்பி இருந்தார்.
இந்நிலையில் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோடேரி கிராமத்தில் நேற்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாமிற்கான படிவங்கள் வழங்கும் பணிகள் நடந்தது. இப்பணிகளை வாக்காளர் பதிவு அலுவலரும், குன்னூர் சார் ஆட்சியரான சங்கீதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.