வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆலோசனை!!
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தும் தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆலோசனையில் ஈடுபட்டார். திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். சென்னையில் இருக்கக்கூடிய மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் கட்டட வளாகத்தில் மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அலுவலர் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
குறிப்பாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்றால் என்ன?. இது ஏற்கனவே பீகார் மாநிலத்தில் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அங்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன அதை தொடர்ந்து தமிழ்நாடு உட்பட 15 மாவட்டங்கள் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. இதை குறித்து விவரங்கள் தெரிவித்து பிரதிநிதிகளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் விளங்கங்களை அளித்தார்.
இது எப்போது தொடங்கப்பட்டு, எப்படி நடத்தப்படும். குறிப்பாக தீவிர திருத்தம் பட்டியலில் சேர்ப்பது மற்றும் நீக்குவது போன்ற ஆலோசனைகளில் மாவட்ட தேர்தல் அலுவலர் வழங்கினார். இதை தொடர்ந்து பிரதிநிதிகள் சந்தேகங்களை கேட்டனர். அதைப்போன்று பணியில் பல்வேறு அதிகாரிகள் குறிப்பாக அரசு அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் குறிப்பாக யாரெல்லாம் இறந்து போன பட்டியலில் இருந்து நீக்குவது, புதிதாக வந்தவர்களை எப்படி சேர்ப்பது என்ற விவரங்களை சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆலோசனையில் கூறினார்.