வாக்காளர் அதிகார யாத்திரையில் பைக்கை இழந்தவருக்கு புதிய பைக்: ராகுல்காந்தி பரிசளிப்பு
பாட்னா: பீகாரில் ராகுல்காந்தி வாக்காளர் அதிகார யாத்திரையின் ஒரு பகுதியாக தர்பங்காவில் பைக் பேரணியை நடத்தினார். அப்போது அவருடன் வந்த பாதுகாவலர்களில் ஒருவருக்கு சுபம் சவுரப் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை வழங்கியுள்ளார். பின்னர் அந்த பைக் காணாமல் போனது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் அவரது செல்போனில் தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசியவர் செப்டம்பர் ஒன்றாம் தேதி பாட்னாவில் புது பைக்கை ராகுல்காந்தி வழங்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதனை சவுரப்பால் நம்பமுடியவில்லை. என்றாலும் அவர் நேற்று முன்தினம் பாட்னா சென்றுள்ளார். அங்கு ராகுல்காந்தி அவருக்கு புதிய பைக்கை வழங்கியுள்ளார்.
Advertisement
Advertisement