வாக்கு திருட்டு மூலம் தான் பாஜ கூட்டணி வெற்றி பெற்றது: உத்தவ் சிவசேனா கட்சி விமர்சனம்
பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையமும் பாஜவும் சேர்ந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டதால் பாஜ கூட்டணி வெற்றி பெற்றதாக உத்தவ் சிவசேனா கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக உத்தவ் சிவசேனா கட்சி தங்கள் சாம்னா பத்திரிகையின் தலையங்கத்தில்,’ பீகார் தேர்தல் இந்திய ஜனநாயகத்தில் நடந்த ஒரு மோசடி. வாக்குகள் மீண்டும் திருடப்பட்டுள்ளன. அதன் மூலமாகவே பாஜ மற்றும் நிதிஷ்குமார் ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்’ என்று குறிப்பிட்டுள்ளது.
Advertisement
Advertisement