வாக்கு திருட்டுக்கு கண்டனம் தெரிவித்து திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
11:36 AM Aug 13, 2025 IST
சென்னை: அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றும் வரும் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் நடந்த வாக்கு முறைகேடுகளுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை வெற்றிகரமாக நடத்திய திமுக நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.