ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்து சிதறியது
Advertisement
ரெய்காவிக்: ஐஸ்லாந்து நாட்டில் 100க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. இந்நிலையில் தலைநகர் ரெய்காவிக்கில் இருந்து தென்மேற்கே உள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் நேற்று ஒரு எரிமலை வெடித்து சிதறியது. எரிமலையில் இருந்து வெளியேறும் லாவா குழம்பு சுமார் 700 முதல் 1000 மீட்டர் அகலமுள்ள பிளவு வழியாக தென்கிழக்கு நோக்கி பாய்ந்து வருகிறது.
தீவிர நில அதிர்வுகள் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக ஐஸ்லாந்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் வசிக்கும் மக்களும் சுற்றுலா பயணிகளும் வெளியேற்றப்பட்டனர். சுமார் 800 ஆண்டுகளாக செயலற்று இருந்த இந்த எரிமலை பகுதி கடந்த 2023 நவம்பர் முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது குறிப்பிடத்க்கது.
Advertisement