புதுடெல்லி: இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா வைத்திருப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.அதில் அமெரிக்காவில் வன்முறை, திருட்டு, கொள்ளைச் சம்பவங்களைச் செய்வது உங்களுக்கு சட்ட சிக்கல்களை மட்டும் ஏற்படுத்தாது. அது உங்கள் விசா ரத்து செய்யப்படுவதற்கும், எதிர்கால அமெரிக்க விசாக்களுக்கு உங்களைத் தகுதியற்றதாக்குவதற்கும் வழிவகுக்கும். அமெரிக்கா சட்டம் ஒழுங்கை மதிக்கிறது. வெளிநாட்டுக்காரர்கள் அனைத்து அமெரிக்க சட்டங்களையும் பின்பற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறது.