விருதுநகர் ஜவுளி பூங்கா உட்கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.437 கோடியில் டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு
சென்னை: விருதுநகர் ஜவுளி பூங்கா உட்கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.437 கோடியில் தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள சிப்காட் நிறுவனம் டெண்டர் கோரியது. விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரத்தில் பி.எம்.மித்ரா எனப்படும் பிரதமரின் ஜவுளி பூங்கா அமைக்கப்பட உள்ளது. இ.குமாரலிங்கபுரத்தில் 1052 ஏக்கர் பரப்பளவில் ரூ.1894 கோடி செலவில் ஜவுளி பூங்கா அமைக்கப்பட உள்ளது.