விருதுநகரில் 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து: தீர்ப்பாயம் உத்தரவு
Advertisement
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 46 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பட்டாசு ஆலைகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட வெடி விபத்தை தொடர்ந்து ஆய்வு செய்ய தீர்ப்பாயம் ஆணையிட்டுள்ளது. தீர்ப்பாயத்தின் உத்தரவை அடுத்து 15 குழுக்கள் மூலம் கடந்த ஒரு வாரம் பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக 400க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வை தொடர்ந்து 46 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Advertisement