வைரலோ வைரல்
திவ்யா தேஷ்முக் சாதனை !
மகளிர் செஸ் உலக கோப்பை போட்டியில் திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். பெண்கள் செஸ் உலகக் கோப்பையை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை திவ்யா படைத்துள்ளார். வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. 3-வது ‘பிடே’ பெண்கள் உலகக் கோப்பை செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடந்து வருகிறது. இதன் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனைகள் கோனெரு ஹம்பி- திவ்யா தேஷ்முக் ஆகியோர் மோதினர்.இதில் கிளாசிக்கல் அடிப்படையில் நடந்த முதல் ஆட்டம் டிரா ஆனது. இந்த நிலையில் கிளாசிக் முறையிலான 2-வது ஆட்டம் நேற்று நடந்தது. இதில் வெள்ளைநிற காய்களுடன் ஆடிய ஹம்பி 34-வது நகர்த்தலில் திவ்யாவுடன் ‘டிரா’ செய்தார். இதனால் இருவருக்கும் தலா ½ புள்ளி கிடைத்தது. இரண்டு ஆட்டங்கள் முடிவில் இருவரும் தலா ஒரு புள்ளியுடன் சமநிலை வகிப்பதால், வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது.இதில் திவ்யா வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் பெண்கள் செஸ் உலகக் கோப்பையை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை திவ்யா படைத்துள்ளார். திவ்யாவை எதிர்த்து விளையாடிய கோனெரு ஹம்பி, 2-ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
பளார் !
கேரளத்தில் அரசு பேருந்து ஒன்றில் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட நபரை இளம்பெண் ஒருவர் கன்னத்தில் அறைந்து வெளுத்து வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. கேரள மாநிலத்தில் அரசு பேருந்து ஒன்றில் இளம்பெண் ஒருவர் தனது சகோதரியுடன் பயணித்துக் கொண்டிருந்தார். பேருந்தில் மூன்று பேர் அமரும் இருக்கையில், ஜன்னல் ஓரத்தில் அந்த இளம்பெண்ணும், அவருக்கு அருகில் அவரது தங்கையும் அமர்ந்திருந்தனர். மூன்றாவதாக, 50 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் வந்து அமர்ந்திருக்கிறார்.சிறுமி என்றும் பாராமல் அந்த நபர் தனது கையால் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார். இதனை அந்தச் சிறுமி தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். இதனைப் பார்த்த இளம்பெண், உடனடியாக எழுந்து, பாலியல் தொல்லையில் ஈடுபட்ட நபரை ஓங்கி கன்னத்தில் அறைந்து, “என் தங்கச்சிய தொட்டு பாக்கணுமா? உன் வீட்டிலும் இதுபோலதான பெண்கள் இருக்காங்க..? உன் அம்மாவுக்கு இருக்கிறது தானே எங்களுக்கும் இருக்கு? உன் வீட்டு பொண்ணுங்க கிட்ட போய் இந்த வேலையைக் காட்டு! எங்கள் அப்பா வயசுல இருக்க, இத்தோட நிறுத்திக்க, ஆதாரம் காட்டவா ?...” என்று கடுமையாக எச்சரித்து வெளுத்து வாங்கியிருக்கிறார்.கையும் களவுமாகப் பிடிபட்ட அந்த நபர், சிறுமியிடம் “சாரிம்மா” என்று மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது