தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சொந்த நாட்டிலேயே அடித்து உதைக்கப்பட்டவர்தான் வினேஷ் போகத் : பாலியல் சீண்டலுக்கு எதிரான போராட்டத்தை குறிப்பிட்டு ராகுல், பஜ்ரங் ஆதங்கம்!!

டெல்லி : பாஜக முன்னாள் எம்.பி.பிரிஜ் பூஷன் மீதான பாலியல் புகார் விவகாரத்தில் ரத்த கண்ணீர் வடிக்கச் செய்த ஒட்டுமொத்த அதிகார அமைப்பும் இன்று இந்தியாவின் வீர மகளுக்கு முன்னால் வீழ்ந்துவிட்டதாக வினேஷ் போகத்தின் பாரீஸ் வெற்றியை ராகுல் காந்தி பாராட்டி உள்ளார். பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில், அடுத்தடுத்து அசத்தல் வெற்றிகளை குவித்து வினேஷ் போகத் இறுதிச் சுற்றுக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். இதனால் குறைந்தபட்சம் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் உறுதியாகி உள்ளது. அவரது திறமையை பாராட்டி நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், "ஒரே நாளில் உலகில் தலை சிறந்த 3 வீராங்கனைகளை வினேஷ் போகத் வீழ்த்தியுள்ளார்.
Advertisement

வினேஷ் மற்றும் அவரது சகாக்களின் டெல்லி போராட்டத்தை பொய்யாக்கியவர்கள் மட்டுமல்லாது, அவர்களின் நோக்கம் மற்றும் திறன்கள் குறித்து கேள்வி எழுப்பிய அனைவர்க்கும் தற்போது பதில் கிடைத்துள்ளது. ரத்த கண்ணீர் வடிக்கச் செய்த ஒட்டுமொத்த அதிகார அமைப்பும் இன்று இந்தியாவின் வீர மகளுக்கு முன்னாள் வீழ்ந்துவிட்டன. இது தான் வெற்றியாளர்களின் அடையாளம். அவர்கள் களத்தில் இருந்து தங்கள் பதிலை தருகிறார்கள்,"இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இதே போன்று வினேஷ்-ன் வெற்றியுடன் டெல்லி போராட்டத்தை மையப்படுத்தி மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா வெளியிட்டுள்ள பதிவில், "பாரீசில் வெற்றி மேல் வெற்றிகளை குவித்து இந்தியாவின் பெண் சிங்கமாக போகத் உருவெடுத்துள்ளார். 4 முறை உலக சாம்பியன், நடப்பு சாம்பியனையும் போகத் வீழ்த்தியுள்ளார். காலிறுதியில் முன்னாள் உலக சாம்பியனையும் தோற்கடித்துள்ளார். இவர் தான் தனது சொந்த நாட்டிலேயே அடித்து உதைக்கப்பட்டார். தெருக்களில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார். பாரீஸ் வெற்றி மூலம் உலகையே ஆளப்போகும் போகத் தனது சொந்த நாட்டின் கட்டமைப்பிடம் தோற்றுவிட்டார், "என்று ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News