விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன் : மாநகராட்சிக்கு பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி
சென்னை : விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன் என சென்னை மாநகராட்சிக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பி உள்ளது. பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிகளில் கரைக்கப்பட்ட சிலைகளின் கழிவுகளை அப்புறப்படுத்தாதது குறித்து தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், பட்டினப்பாக்கம் கடற்கரையில் குவிந்த கழிவுகளை அப்புறப்படுத்த மாநகராட்சி தவறிவிட்டது என்றும் கட்டணம் வசூலித்தால் அந்த நிதி மூலம் தூய்மை பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் தீர்ப்பாயம் குறிப்பிட்டுள்ளது.
Advertisement
Advertisement