விழுப்புரம் வீடூர் அணையிலிருந்து மார்ச் 3ம் தேதி முதல் ஜூலை 7 வரை நீர் திறக்க உத்தரவு
07:59 PM Feb 28, 2025 IST
Share
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணையிலிருந்து மார்ச் 3ம் தேதி முதல் ஜூலை 7 வரை நீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 135 நாட்களுக்கு மொத்தம் 328.56 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. வீடூர் அணை நீர் திறப்பு மூலம் 3,200 ஏக்கர் பாசனப்பரப்புகள் பாசனவசதி பெறும் என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.