விழுப்புரத்தில் அன்புமணி ஆர்ப்பாட்டம் தைலாபுரத்தில் ராமதாஸ் கொடியேற்றம்
இந்நிலையில் தமிழகத்தில் வன்னியர்களுக்கான 10.5 இடஒதுக்கீடு கோரி உச்சநீதிமன்றம் ஆணையிட்டு 1200 நாட்களுக்கு மேலாகியும் இன்றுவரை இட ஒதுக்கீடு வழங்காமல் இருப்பதை கண்டித்தும், உடனடியாக வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் இன்று விழுப்புரம் புதியபேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சித் திடலில் பாமக சார்பில் அன்புமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அன்புமணி ஆர்ப்பாட்டம் நடத்திய அதே நேரத்தில் தைலாபுரம் தோட்டத்தில் வன்னியர் சங்கம் 46ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் வன்னியர் சங்க கொடி ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்த விழாவில் பாமக முன்னாள் தலைவர் தீரன், மாவட்ட செயலாளர் ஜெயராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதன் பின் செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறியதாவது: வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வலியுறுத்தி அன்புமணி தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறாரே?
போராட்டம் எல்லா இடத்திலும் நடத்த வேண்டும் என்றுதான் நான் சொல்கிறேன். போராட்டம் யார் செய்தாலும் வாழ்த்துக்கள் தான்.
கேள்வி: பூம்புகாரில் நடைபெறும் மாநாட்டிற்கு அன்புமணிக்கு அழைப்பு விடுப்பீர்களா?
எல்லோரும் வரலாம். யாரையும் வரவேண்டாம் என நாம் சொல்ல முடியாது. அவர்களும் வரலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.